நகசுத்தி பிரச்சனையை இப்படி வெரட்டுங்க…!!
விரலில் வரும் நகச்சுத்தி., சரி செய்ய எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
நகச்சுத்தி வருவதற்கான காரணம் ஸ்டெபையோ காக்கஸ் என்ற பாக்டீரியா நகை இடுக்கில் வளர்வதினால் தான்.
இந்த நகச்சுத்தி வந்தால் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்யலாம்
முதலில் எலுமிச்சை பழத்தை விரலில் சொருகி வைக்கலாம் விரைவில் குணமாகும்.
வேப்பிலை மஞ்சள் இரண்டுமே கிருமி நாசினி என்பதால் இதைக் கொண்டு நகச்சுத்தி மேல் பற்று போடலாம்.
கல் உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும் நகச்சுத்தி சரியாகும்.
கடல் நீரில் கால்நடைத்தாலும் நகச்சுத்தி குணமாகும்.
மஞ்சளை தேங்காய் எண்ணெயில் கரைத்து நகத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்…
வேப்ப எண்ணெய்யை பாதிக்கப்பட்ட நகத்திலும் விரலைச் சுற்றிலும் தேய்த்து வர நவசுத்தி விரைவில் குணமாகும்..
மருதாணியில் எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்து விரல் நகங்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் தொப்பி போல் வைக்கலாம்.