குழந்தைக்கு பிடித்திருக்கும் சளி நீங்க..!!
கைக்குழந்தைக்கும் சரி பிறந்து ஒரு வயதிற்கு மேற் பட்ட குழந்தைகளுக்கு சரி.. மார்பு சளி கட்டாயம் பிடிக்கும் இதை பாட்டி வைத்தியம் மூலமாகவே சரி செய்துவிடலாம். இதனால் குழந்தைக்ளுக்கு எந்த வித பின் விளைவும் ஏற்படாது.
* ஆடாதோட இலையை பாதி எடுத்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து அதன் சாறை எடுத்து.., மூன்று துளி தேன் கலந்து, நன்கு குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவி விட வேண்டும். இது சளியை உடனே முறித்து விடும்.
* தூதுவளை இலையை நீரில் அலசி, ஒரு பாத்திரத்தில் அந்த இலையை போட்டு 1/4 ஸ்பூன் நெய் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதன் சாற்றை எடுத்து குழந்தையின் நாக்கில் தடவினால், சளியை கரைத்து வெளியேற்றி விடும்.
* வல்லாரை இலையின் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து.., அதில் தேனை குழைத்து , குழந்தையின் நாக்கில் தடவி வந்தால்.., சளி மட்டுமல்லாது இரும்பலும் குணமாகும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி