வெந்நீருடன் நெய்..! உடலுக்கு செய்யும் அதிசயம்..!
அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடிக்கும்போது உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்நீருடன் நெய் சேர்த்து குடிப்பதின் நன்மைகள்:
செரிமானம் மேம்படுகிறது: நெய் செரிமான நொதிகளை தூண்டி உணவை எளிமையாக செரிமானம் அடையச்செய்கிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு இது சிறந்த மருந்தாகும். சூடான நீர் குடலை சுத்திகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
உடல் ஆற்றல் அதிகரிக்கிறது: நெய் உடலுக்கு வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் தசைகளை வலுவாக்கி உடல் உழைப்பை தாங்குவதற்கு ஆற்றலை தருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது: நெய்யில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
சருமம் பளபளப்பாகும்: நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலம் சருமத்தை பளபளப்பாகவும் ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது. இது முதுமை, சரும வெடிப்பு, வறட்சி போன்ற சரும பிரச்சனைகளை தடுக்கிறது.
மனதை தெளிவாக்கும்: நெய் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து நினைவாற்றலை அதிகரிக்கிறது. பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து மனதை தெளிவாக வைக்கிறது.
எலும்புகளை வலுவாக்குகிறது: நெய்யில் இருக்கும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கி மூட்டு வலி, எலும்பு முறிவு ஆகிய பிரச்சனைகளை தடுக்கிறது.
ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது: இது பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளை சமநிலையில் வைக்கிறது. மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது.
உடல் எடையை குறைக்கிறது: உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அழித்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. உடலின் எடையை குறைத்து உடல் பருமனை குறைக்கிறது.