தமிழ் பெண்ணை இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி. கிரிக்கெட் வீரர்!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமன் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலியா கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணங்களில் ஒருவராக திகழ்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு மனரீதியாக பிரச்னை இருப்பதாக கூறி கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்தார். தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கியிருக்கும் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடர்களில் மட்டும் பங்கேற்றுள்ளார்

இந்நிலையில், மேஸ்க்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை காதலிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த வினி ராமன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றும் மருத்துவப்படிப்பை படித்துள்ள அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில் தான் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் மேக்ஸ்வெல், வினி ராமனும் முடிவெடுத்துள்ளனர்,அதற்கு சான்றாக மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோதிர சின்னத்தோடு ஜோடியாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

இப்போது மேக்ஸ்வெல்லுக்கும், வினி ராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் இருவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

What do you think?

கொரோனாவிற்காக தனி WebSite-யை உருவாக்கிய கூகுள் நிறுவனம்!

‘நூதன முறையில் போராடும் ஆடு’ அம்மா, அண்ணனை மீட்டுத்தரகோரி மனு!