“ஆழத்தில் ஒளிர்கின்றேன்.. அகத்தில் நீ தானோ..” அநீதி நாயகன் அர்ஜுன் தாஸ் 32…!!
சில ஹீரோவா பாக்குறதுக்கு நல்ல அழகா இருக்காரே அப்படினு தோணும்,இந்த ஹீரோவிற்கு,கண்ணு அழகா இருக்கு, சிரிப்பு அழகா இருக்கு அப்படினு நம்ம எல்லாருமே கண்டிப்பா விமர்சனம் செஞ்சிருப்போம், அதயே மாதிரி இந்த ஹீரோவோட குரலுக்கு பல பெண்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பாக்குறதுக்கு நல்ல ஹீரோ மெட்ரியல் மாதிரி இருக்காரே ஆனா குரல் மட்டும் வில்லன் மாதிரி இருக்குதே அப்படினு தோணும் நம்ம “அர்ஜுன் தாஸ்” அவர்கள்.
2012ம் ஆண்டு திரையில் பயணித்த அரிஜுன், அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால், வானொலியில் ட்ரைவ் என்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார். அதுக்கு அப்புறம் கைதி படத்தில் வெளிவர ஆரம்பித்த அர்ஜுன், விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அதனை தொடர்ந்து பல பிரபலமான நடிகர்களின் படங்களில் நடித்து, இளசுகளின் மனதில் இடம் பிடித்தார் அர்ஜுன் தாஸ்,அநீதி, ரசவாதி படத்தில் ஹீரோவா நடித்திருப்பார், துருவ நச்சத்திரம் படத்தில் வரும் வில்லனுக்கு,தன்னுடைய குரலில் பேசியவர்.
அநீதி திரைப்படத்தில் என்னதான் ஒரு காதல் கதை இருந்தாலும், அப்பா பையனின் ஒரு அழகான காதலுக்கு முன் அது தோற்றுப்போகும். கிராமத்து வாழ்வு என்பது மிகவும் அழகான ஓன்று அதில் வாழும் தந்தை மகன் பாசம் சொல்லவே தேவை இல்லை,
ஒரு அப்பா தன்னுடைய மகனுக்காக பாடும் பாடல் இது,என்னோட சாமி நீ அழலாமா வானத்தை காட்டி உனக்கு சோறூட்ட போறேன், ஏன் தோள்மேல தூக்கி உன்ன ஊரு சுத்தி காட்ட போறேன். இசையமைப்பாளர் “ஜி. வி. பிரகாஷ் குமார்” இசையில், பாடகர் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் இது.
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன்……..
உன்னுடைய தலைகோதி கலைப்பதற்கு, தோள் மேல் சாய்ந்து மடிசாய்ந்து கொள்வதற்கும், இருவரும் சேர்ந்து திகட்ட, திகட்ட காதலிப்போமா..? எங்கோ பார்த்த உன் புகைப்பட நியபாகம் உன் முகம்,பழைய காயங்கள் மறைக்கவும், புது காயங்கள் பிறக்கவும் நீ என்னை மாயன்கள் செய்கிறாய். இசையமைப்பாளர் “ஜி. வி. பிரகாஷ் குமார்” இசையில்,பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் யாமினி கண்டசாலா பாடிய பாடல்.
தலைக்கோதி கலைப்பதற்கும்
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்
மடி சேர்ந்து கொள்வதற்கும்
யாதும் நீ ஆகினாய்……….
தூரத்தில் வெளிச்சமாக தெரியும் நீ யாரோ ?நிலவின் ஒளியானது கிணற்றில் வளையல் போல் அமர்ந்து இருக்கிறது.இசையமைப்பாளர் “ஜி. வி. பிரகாஷ் குமார்” இசையில்,பாடகர்கள் ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் ரவி. ஜி பாடியது இப்பாடல்.
தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ..?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ…….
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் தாஸ்…..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..