அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு ஊட்டி- சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்..?
கோடைகாலம் வந்ததும் பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு விடுமுறை தான், வீட்டில் குழந்தைகள் ஒரே அட்டகாசம் தான், சில சுற்றுலா தலங்களுக்கு சென்று சுற்றி பார்க்க ஆசையாக இருந்தும்.., ஆனா எங்கே செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா.
இனி கவலை வேண்டாம்.. நீங்கள் ஊட்டியில் மகிழ்ச்சியாக சென்று பார்க்க, முக்கியமான சில இடங்கள் .
ஊட்டி என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது, குளிர் தான். எங்கும் அடர்ந்த காடு, தேயிலை தோட்டங்கள். பசுமையான புல்வெளி, சிலு சிலுவென்று காற்று, அந்த குளிர்ந்த காற்றில் குடிக்க ஊட்டி தேனீர், குழந்தைகளுக்கு என்று சாக்லேட், எல்லோருக்கும் பிடித்த ஊட்டி வர்க்கி.. என பல உண்டு.
நாம் சுற்றி பார்ப்பதற்கும் அதே போல தான் பல இடங்கள் உண்டு, அதில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
பொட்டானிக்கல் கார்டன் : ஊட்டி என்றாலே பொட்டானிக்கல் கார்டன் தான் நினைவில் வரும், காரணம் இயற்கை மூலிகை செடிகள், இயற்கை தோட்டங்கள், மாடித்தோட்டம், வண்ண வண்ண பூக்கள், என அனைத்தும் இருக்கும்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு மலர் கண்காட்சி நடைபெறும், அதில் பார்வையாளர்களை கவரும் விதமாக பூக்கள், மற்றும் செடிகளால், மயில், இந்திய வரைப்படம், விலங்குகள் என வடிவமைக்கப்பட்டு வைத்திருப்பார்கள்.
தொட்டபெட்டா : தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான தொட்டபெட்டா 2623 அடி உயரம் கொண்டது. நீலகிரி மலைத்தொடரில் மிக உயரமான இடமாக தொட்டபெட்டா புகழ்பெற்றது.

அங்கு சென்றால் மேகம் நம்மை தீண்டி செல்வதை காணவும் முடியும். அதை தொட்டு ரசிக்கவும் முடியும்.
பைகாரா நீர்வீழ்ச்சி : ஊட்டிக்கு சென்று பைகாரா நீர் வீழ்ச்சி கண்டு கழிப்பதை பலரும் மறந்து விடுகின்றனர். காரணம் அங்கு ஏற்கனவே குளிர் அதிகம் இருக்கிறது. இதில் நீர்வீழ்ச்சியில் சென்று குளித்தால் இன்னும் குளிர் அதிகமாகி விடும் என்று நினைத்து தான்.
ஆனால் அது மூலிகை மிக்க தண்ணீர் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். சுற்றி எங்கும் இருக்கும் மரங்களில் இருந்து 55மீ உயரத்தில் இருந்து. இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருவதால், சுத்தமாகவும் இருக்கும். அங்கு சென்று சுவாசித்தாலே போதும் ஒற்றை தலைவலி, இடைவிடா தும்மல், இரும்பல் என அனைத்தும் நீங்கி விடும்.
அதற்கு கீழே படகு சவாரியும் இருப்பதால். அதில் சென்று கூட இந்த இயற்கை அழகை ரசிக்கலாம்.
ஊட்டி ரயில் : ஊட்டி என்றாலே பலரும் செல்ல ஆசைப்படும் ஒரு இடம் ஊட்டி மலை ரயில் தான். இதில் ஒரு முறை பயணம் சென்றாலே மறக்க முடியாத ஒரு நினைவாக மாறிவிடும், இதை சிலர் பொம்மை ரயில் என்றும் அழைப்பார்கள்.
ஊட்டி மலைப்பகுதியில் 208 வளைவுகள், 16 குகைகள் மற்றும் 250 பாலங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் இந்த ரயில் கடந்து சென்று பயணிகள் அனைவரையும் மகிழ் விக்கிறது. அதிலும் இதில் பயணிக்கும் பொழுது அருவிகள், விலங்குகள், பறவைகள் என அனைத்தையும் பார்க்கலாம்.
வெ.லோகேஸ்வரி