‘நூதன முறையில் போராடும் ஆடு’ அம்மா, அண்ணனை மீட்டுத்தரகோரி மனு!

திருச்சியில் ஆடு திருடுபோனதை கண்டுபிடிக்க நூதன முறையில் புகார் கொடுத்த சம்பவம் வைரலாக பரவுகிறது.

திருச்சியில் 2 ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த அந்த ஆட்டின் உரிமையாளர் வித்தியாசமாக காணமால் போன ஆட்டின் குட்டியின் கழுத்தில் ஒரு அட்டையை மாட்டி அதில் `என் அம்மாவையும் அண்ணனையும் மீட்டுக்கொடுங்கள்!’ என்று எழுதி அந்த குட்டி ஆடு கோரிக்கை வைப்பது போன்று செய்தார்.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். திருச்சியில் திருடு போன ஆட்டைக்கண்டுபிடிக்க இப்படி நூதன முறையில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

What do you think?

தமிழ் பெண்ணை இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி. கிரிக்கெட் வீரர்!

‘தள்ளிப்போகும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி’ பின்னணி என்ன?