கோகுல்ராஜ் கொலை வழக்கு ; பாஜக பிரமுகர் கைது..!!
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, யுவராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறாக சில போஸ்ட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் ஒன்று எழுந்துள்ளது. அதன் பெயரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் நடத்திய விசாரணையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பாஜக செயலாளர் இசக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை கைது செய்து, 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வைகுண்டம் குற்றவியல் நீதி மன்றத்தில், ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன்
வைகுண்டம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும். சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட அனைத்து போஸ்ட் களையும் உடனடியாக நீக்க வேண்டும் என தீர்ப்பளித்து, ஜாமினில் விடுவீத்தார்.
மேலும் இதுபோன்ற பல உண்மை சம்பவங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..