‘அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை’ பொதுமக்கள் மகிழ்ச்சி!


22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நேற்று கூட தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனைய செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.33,312க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய் குறைந்து ரூ. 4,164க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

What do you think?

திரௌபதி படத்தை பாராட்டிய தமிழக அமைச்சர்!

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்!