தங்கம் விலை உயர்வு …!

தங்கம் விலை இன்று 28 ரூபாய் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து 32 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது நடுத்தர குடும்ப மக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை உயர்வு …!

அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை ஜனவரி 8ஆம் தேதி 31 ஆயிரத்து 432 ரூபாய் என புதிய உச்சம் கண்டது. தொடர்ச்சியாக ஜனவரி 14ஆம் தேதி ஒரு சவரன் 30 ஆயிரத்து 112 ரூபாய்க்கும், பிப்ரவரி 8ஆம் தேதி 31 ஆயிரத்து 184 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை உயர்வு …!

இந்நிலையில், தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 28 ரூபாய் உயர்ந்து எப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை…!

லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி…!