நேற்று சற்றே குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்று (மே 13) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5,715 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 45,720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 6,184 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 49,472 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 78 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 78 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.