தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் மந்தமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனாலேயே தங்கம் விலை உச்சம் தொட்டு வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் மார்ச் 6 ஆம் தேதி தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு சவரனுக்கு 33 ஆயிரத்து 760 ரூபாயாக உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 216 ரூபாய்க்கும் சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும், கட்டி வெள்ளியின் விலை 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

What do you think?

கொரோனாவை ஓவர்டேக் செய்யும் காலரா – உஷார் மக்களே உஷார்..!

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மூவர் அதிரடி கைது