சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரையும், இல்லத்தரசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (ஏப்.10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 5,600 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 44,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 40 ரூபாய் குறைந்து 6,092 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 48,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து 80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் வரை குறைந்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்திருப்பது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளது, இதன் விளைவாக தங்கத்தின் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.