புனிதவெள்ளி துக்கநாளா..? புனிதநாளா..? கிறிஸ்தவர்கள் இன்று இதை செய்ய மறக்காதீங்க..!!
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துக்க தினம்.. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாளில் நாம் திருப்பலிக்கு சென்று ஏன் வழிபட வேண்டும்.., என்று பார்க்கலாம்.
கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாள் “புனித வெள்ளி” நாம் செய்யும் பாவங்களில் இருந்து மீட்டு நம்மை இரட்சிப்பதற்காக பிறந்த இயேசு, இன்று சிலுவையில் அறையப்பட்ட நாள், நமக்காக துயரத்தை சுமந்து சிலுவைகள் சுமந்து அதே சிலுவையில் அறையப்பட்டு உயிரை துறந்த துக்க நாளையே புனித வெள்ளி என்று அழைக்கிறோம்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயர்துறந்த நாளாக இருந்தாலும் கூட கிறிஸ்தவப் பெருமக்கள் இந்த நாளை புனித வெள்ளியாக கடைபிடிக்கின்றனர். இயேசு கடைசியாக வியாழன் இரவில் உணவை சாப்பிட்டு மறுநாள் சிலுவையில் அறையப்பட்டதால் பெரிய
வியாழனில் இருந்து துக்க காலம் தொடங்கி ஈஸ்டர் தினம் – அதாவது இயேசு பிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த காலம் வரை நீடிக்கும். மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவின் வெளிப்பாடான நாளாக இருப்பதால் இதனை புனித வெள்ளி என்று கிறிஸ்தவர்கள் அழைக்கின்றனர்.
இந்த புனித வெள்ளி நாளில் கிறிஸ்தவர்களின் சிறப்புப் பிரார்த்தனையாக பிற்பகல் 3 மணி வரை மெளனத்தைக் கடைபிடிப்பார்கள். அனைத்து தேவாலயங்களிலும் இன்று மதியம் முதல் கிருஸ்தவர்கள் மெளனம் கடைபிடிப்பார்கள்.
அதன்பின் தேவாலயங்களில் சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாகப்பட்டு திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து என 3 பகுதிகளாக இந்த வழிபாடு நடைபெறும்.
இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில் மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கு எந்த நேரத்திலும் திருவுணவு எடுத்து சென்று கொடுக்கலாம். மேலும் இரக்கமுள்ள இறைவா, முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவுக்குத் தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஆளாகிவிட்டோம்.
எங்கள் ஆண்டவராகிய நீங்கள் உம் திருமகன் கிறிஸ்துவின் பாடுகளினால் நீர் அந்தச் சாவினை அழித்தீர். இயற்கை நியதிப்படி பழைய ஆதாமின் சாயாலைத் தாங்கிய எங்களை, உமது அருளால் புனிதமடைந்து, புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, அனைத்திலும் அவரைப்போல் ஆகிடச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம் என மண்டியிட்டு வணங்கி வேண்டிக்கொண்டால் பாவங்கள் நீங்கும் என்பது கிறிஸ்தவர்க்ளின் நம்பிக்கை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..