விவசாயிகளுக்கு குட் நியூஸ்…!! தமிழக அரசின் சூப்பர் அறிக்கை..!!
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டியும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வலியுறுத்தியும்,
கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த தேங்காயை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்றும், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்து சென்சார் குறியீடு அளிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அதற்காக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளத்தால் அதிருப்திக்கு உள்ளான விவசாயிகள் போராட்டத்தை நடக்க தொடங்கினார்கள்.
மேலும் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்களை மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்திருந்த நிலையில், அதனை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை..? என விவசாயிகள் போராட்டங்களை நடத்த துவங்கினார்கள்.
தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு தற்போது சிறந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு தேங்காய் விற்பனையும், அதைதொடர்ந்து ரேஷன் கடைகளிலும் விரைவில் விற்பனை செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் அதிகம் உள்ளதால், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளிலும், பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் விற்க கூட்டுறவு துறையுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
முதல்கட்டமாக “டேன்பெட்” எனப்படும் தமிழக கூட்டுறவு விற்பனை இணையம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கூட்டுறவு விற்பனை சங்கம் வாயிலாக அதில் உறுப்பினராக உள்ள விவசாயிகளிடம் இருந்து 10,000 தேங்காய்கள் கொள்முதல் செய்திருக்கிறது.. இவை சென்னையிலிருக்கும் 4 கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு தலா 2500 – 3000 எண்ணிக்கையில் தேங்காய்களை அனுப்பி வைத்துள்ளோம். இந்த தேங்காய்கள், அந்த பண்டக சாலைகள் நடத்தும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
இந்த தேங்காய்கள் கூட்டுறவு துறையின் சார்பில் விநியோகிக்கப்படுவதால், விவசாயிகளிடம் இருந்து கிலோ தேங்காய் 30 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது, குறிப்பாக போக்குவரத்து செலவுகள் சேர்த்தும் விவசாயிகளிடம் கொடுக்கப்படும்.
ஒரு தேங்காய்க்கு நிர்ணயிக்கப்படும் விலையை அனைத்து சந்தைகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும். இந்த விலை வெளிச்சந்தையில் விற்கப்படும் விலையை விட சற்று குறைவாகவே இருக்கும்.எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..