வேலூர் மக்களுக்கு குட் நியுஸ்..! வேலூரில் கொண்டுவரபட்ட புது நலத்திட்டங்கள்..! என்னென்ன தெரியுமா..?
வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள கரசமங்கலம் கிராமத்தில் இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபா கூட்டமானது கரசமங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் ஸ்டாலின் தயாநிதி தலைமையில் நடைபெற்றது.
இதில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேல் உள்ளிட்டோரும் திரளான கிராம மக்களும் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
பின்னர் கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி நீண்ட நாட்களாக அரசு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைபட்டா வீடுகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைபட்டாக்கள் வழங்கபடுகிறது.
இதில் சிலர் ஏற்கனவே வாங்கி விட்டு மீண்டும் இலவச வீட்டுமனைபட்டா வாங்கியுள்ளதாக புகார்கள் வருகிறது. அவ்வாறு வந்தால் அவ்வகையான பட்டாக்கள் ரத்து செய்யபடும்.
மேலும் கிராமங்கள் மேம்பாடு அடைய பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடுகளை கட்டிகொடுக்கிறோம். உங்களின் பொருளாதாரம் உயர் சிறுதொழிலை நீங்கள் செய்ய வேண்டும் பிளாஸ்டிக்கை உருக்கி பொருட்கள் தயாரிப்பு மற்றும் சிறு தொழில்கள் மூலம் உங்களின் பொருளாதார நிலையும் உயரும் என்று பேசினார்