திருப்பதி தேவஸ்தானம் சொன்ன குட் நியூஸ்..!! இனி யாரும் பயப்பட வேண்டாம்..!!
உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தளங்களில் ஒன்றாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும் லட்டுவில் மாட்டு கொழுப்பு., பன்னி கொழுப்பு., மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருபதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகார் அளித்திருந்தார். அதற்கான பரிசோதனையானது குஜராத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான ஆய்வறிக்கையில் எந்த அளவிற்கு விலங்குகள் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கை வெளியாகி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்., அதாவது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள்., ஜகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்திலேயே நடந்தது., நடத்தபட்டது.. என ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் உட்பட பலரும் குற்றம்சாட்டினர்..
இந்நிலையில், மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி லட்டுவில் பயன்படுத்தப்படும் நெய்யை மீண்டும் மாதிரி சாம்பிள் எடுத்து ஆய்வு செய்யப்படும்., லட்டு கலப்படம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார். அதபோல் இந்த லட்டு கலப்படம் விவகாரம் குறித்து ஆந்திரா அரசானது மத்திய அரசிடம் முறையிட்டதின் பேரில்., இந்த சோதனைகளை விரைந்து நடத்தி முடித்து., சம்மந்தபட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்..
அதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் பேசியபோது “லட்டு மாதிரிகளின் சாம்பிள்களை சோதனை செய்ததில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் உறுதியாகியுள்ளது.. கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.. அதற்கான பணிகள் விரைந்து நடத்தவும் உத்தரவிட்டுள்ளது..
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ”ஸ்ரீவாரி லட்டுவின் தெய்வீகத்தன்மையும், தூய்மையும் இப்போது கறைபடவில்லை. லட்டு பிரசாதத்தின் புனிதம் மீண்டும் மீட்கப்பட்டது. லட்டு பிரசாதத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் திருப்பதி தேவஸ்தானம் உறுதியாக உள்ளது” எனவே இனி பயமின்றி பக்தர்கள் லட்டுவை சாப்பிடலாம் என தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..