மத்தியபிரதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதல்; 3 பேர் உயிரிழப்பு?

மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சிங்ரவுலி பகுதியில் நிலக்கரி ஏற்றி சென்ற இரு சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் விபத்தில் சரக்கு ரெயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் சிக்கி இருக்கலாம் என்றும் 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினரும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து அப்பகுதியினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

What do you think?

சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் எழுத்தர்களும் நிலத்தரகர்களும் நுழைய தடை

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மோடியின் அடிமைகள் – உதயநிதி ஸ்டாலின் சாடல்