அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் – தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் தங்கள் அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேலை நேரத்தில் அடையாள அட்டையை அணியாத ஊழியர்கள் மீது, அந்தந்த துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்த துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இதுக்குறித்து நிர்வாக பணியாளர் சீர்திருத்தத்துறை நிர்வாகம், பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்து தான் பணி செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

நம்பிக்கை தருவதே நல்லரசு – CAA குறித்து வைரமுத்து ட்வீட்!

டெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு !