“அயலக மண்ணிலும் அரசு கோப்புகள்..” 3050 கோடி ரூபாய் ஒப்பந்தங்கள்..!!
அந்நிய முதலீடுகளை ஈர்பதற்காக அமெரிக்கா பயணம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் “அரசு கோப்புகள் தொடர்பான பணிகளை இ-ஆபிஸ் வழியாக நடைபெறுவதாக” தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக பெரிய பொருளாதார நாடக இருக்கும் தமிழ்நாட்டை வருகின்ற 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார விகிதத்தில் மாற்றி ஒரு இலக்கை அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக தமிழக அரசு உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அமெரிக்க சென்றார்..,
17 நாள் பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தமானது கையெழுதிடப்பட்டு வருகிறது..
முன்னதாக தமிழ்நாட்டில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் பேபால், நோக்கியா, மற்றும் மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.., அதன் பின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடனும்
200 கோடி ரூபாய் முதலீட்டில் சிகாகோ ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தமும், 2௦௦ கோடி ரூபாய் முதலீட்டில் அஷ்யூரன்ட், ஈட்டன் போன்ற முதன்மை நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுதிடப்பட்டுள்ளது..
அதன் பின்னர் 2௦௦௦ கோடி ரூபாய் முதலீட்டில் டிரில்லியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும், அமெரிக்காவின் சிகாகோவில் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும், 500 கோடி ரூபாய் முதலீட்டில் “லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் 100 கோடி விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடனும் 250 கோடி ரூபாய் முதலீட்டில் விஸ்டியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப் பட்டுள்ளது.. இதுவரை 3050 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்கள் இதுவரையில் கையெழுத்திடப்பட்டுள்ளது…
இந்நிலையில், அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் சந்திப்பில் இருந்தாலும்., தான் கையெழுத்திட வேண்டிய அரசு கோப்புகள், திட்டங்கள் பற்றி ஆலோசித்துக்கொண்டும்., கையெழுத்திட வேண்டிய கோப்புகளில் கையெழுத்திட்டும் திட்டம் குறித்த பணிகளை மேற்பார்வையிட்டு தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.., “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபிஸ் (e_office) வழியே பணிகள் தொடரந்து நடந்து கொண்டு இருக்கிறது…” என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..