கொரோனாவால் 54,000 சிறை கைதிகளுக்கு விடுதலை!

ஈரானில் அதிகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 54,000 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவை தொடர்ந்து ஈரானிலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.தற்போது வரை கொரோனாவால் 2,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் ஈரான் சிறையில் கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் 54,000 கைதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது. அதே சமயம் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற கைதிகள் இந்த சலுகையின் கீழ் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

What do you think?

‘250CC இன்ஜின், 150KM High Speed’ சென்னை டிராபிக் போலீசின் புதிய Bike!

சூர்யாவின் ‘அருவா’ ‘வேல்’ படத்தின் இரண்டாம் பாகமா?