உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்…!! குவியும் பாராட்டு…!!
வேலூரில் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாரம்பரிய கலைகள் மூலம் நடனமாடி போதைக்கு எதிராகவும் சாலை பாதுகாப்பு குழந்தைகள் வன் கொடுமை குறித்து விழிப்புணர்வு உலக சாதனை
வேலூர் மாவட்டம், காட்பாடியில் அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில் ஜன ஷிக்ஷா கலாலயம் சார்பில் நோபல் புக் ஆப் வோர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனை நடன நிகழ்ச்சி பாரம்பரிய கலைகளான சிலம்பம் ஒயிலாட்டம் தப்பாட்டம் ,பரதநாட்டியம் உள்ளிட்ட 7 வகையான பாரம்பரிய கலைகள் மூலம் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விமலா துவங்கி வைத்தார் இதில் வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த உலக சாதனையை நிகழ்த்தினார் இதில் 35 நிமிடம் பாரம்பரிய கலைகளுடன் போதை பொருட்கள் ஒழிப்பு,குழந்தைகள் வன் கொடுமை தடுத்தல் சாலை பாதுகாப்பு ஆகியவைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி நடனமாடி சாதனை நிகழ்த்தப்பட்டது.
அதற்கான சாதனை சான்றுகளும் வழங்கப்பட்டது இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் விளையாட்டு சங்கங்களை சேர்ந்தோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..