அரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசு பணிகளில் பதவி உயர்வின் போது, இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறையில், உதவி பணியாளர் பணியிடத்தினை, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் நிரப்பும் முடிவிற்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோலின் கோன்ஸ்லேவ்ஸ் மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோர் வாதாடுகையில், பழங்குடியினருக்கு உதவ அரசியல் சட்டப்பிரிவு 16ல் நான்கு, 16 நான்கு ஏ ஆகிய பிரிவின்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2012 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் எல நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், பணி உயர்வின் போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும், இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளனர்.

பதவி உயர்வின் போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என எந்த ஒரு தனிநபரும் உரிமை கோர முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறினர். அரசு பணிகளில் நியமனங்களின்போது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட முடியாது என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர். இதே போல், பதவி உயர்வின் போதும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு , மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

What do you think?

ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி..!

காவலர் தேர்விலும் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆயிரம் பேர்..! – விசாரணையில் அம்பலம்