ஆளுநரா..? ஆரியநரா..? தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை..!! மன்னிப்பு கேட்ட தூர்தர்ஷன்..!!
இந்தி தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் “திராவிட” என்ற சொல் ஒலிக்காதது சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில் டிடி தமிழ் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது
சென்னையில் இன்று இந்தி தின விழாவானது தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். விழா துவக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்ப்பட்டது…
அப்போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்”, என்ற வரிகள் மட்டும் இடம் பெற வில்லை. தமிழ்நாட்டில் எந்த ஒரு விழாவானது தொடங்கினாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவது வழக்கம்.. அப்படி இருக்கையில் வரிகள் விடுபடுவதும் கடும் கண்டனத்துக்குரியது என சர்ச்சைகள் எழத்தொடங்கியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்..
ஆளுநரா..? ஆரியநரா..? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் ஒலிக்க செய்வது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதற்கு சமம்.. ஒரு ஆளுநர்
சட்டப்படி நடக்காமல், அவரது இஷ்டப்படி நடப்பது சரியா..? அந்தப் பதவிக்கு அவர் தகுதியானவரா..? இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துவது தான் ஆளுநரின் வேலையா..
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா..? தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்.. என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு… pic.twitter.com/NzS2O7xDTz
— M.K.Stalin (@mkstalin) October 18, 2024
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் தரப்பில் கண்டனங்கள் எழத்தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிட என்ற சொல் விடுபட்டதற்கு டிடி தமிழ் சேனல் மன்னிப்பு கேட்டு இணையத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது..
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன்விழா நினைவேந்தல் விழாவை சிறப்பித்தார். தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக ஒரு வரி தவறிவிட்டது. கவனக்குறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ, தமிழ் தாய் வாழ்வையோ அவமதிக்கும் எண்ணம் பாடகர்களிடம் இல்லை. இது தொடர்பாக, மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். என இவ்வாறே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..