ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு எதிராக செயல்படுகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..!!
தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காது.., மசோதாக்களை கிடப்பில் போடுவது அரசின் முக்கிய முடிவுகளை தனிச்சையாக ஈடுபடுவது, அரசிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பரப்புவது.., தமிழ்நாடு அரசிற்கு எதிராக செயல்படுவது என அவர் மீது பல புகார்கள் எழுந்து வருகிறது.
பல புகார்கள் ஆளுநர் மீது எழுந்து வரும் நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களை ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்களாக அனைத்து செயல்களையும் செய்து கொண்டு இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி என்பது தமிழ்நாடு மக்களுக்கு நன்கு தெரியும்.
திருக்குறளின் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா என்பதை பார்ப்பது முதல் சனாதனம் குறித்து சில ஆய்வுகளை செய்து கொண்டு இருக்கிறார். திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே அவருக்கு எரிச்சலாக இருக்கிறது போல, திராவிடத்திற்கு எதிரான வன்மம் நிறைந்த வார்த்தை போரை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
பாஜக வின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான தீனதயாள் உபாத்தியா என்ற நூலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு சென்றும் திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது என கூறியிருக்கிறார். இப்படி சொல்லும் அவர் எந்த வகையில் பிரிவினை பிரதிபலிக்கிறது என்று சொல்லி இருந்தால் விரிவாக விளக்கம் கொடுக்கலாம் பொத்தம் பொதுவாக பிரிவினையை பிரதிபலிக்கிறது என்று அவர் சொல்லுவது புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.
ஒரு காலகட்டத்தில் திராவிடம் என்ற சொல் ஒரு இனத்தின் பெயராகவும், மொழியின் பெயராகவும் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது அரசியல் கோட்பாட்டின் பெயராக மாறியுள்ளது. திராவிட இயக்கம் என்பது சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம், மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி, இந்திய கூட்டாட்சி என்பதே ஆகும்.
தமிழ்நாட்டை சேர்ந்த அனைவருமே சூத்திரர்கள் என்ற சொல்லை விதைத்து மனுநூல் அதன் 10வது அத்தியாயம் 44வது சூத்திரத்தில் தமிழகம் என்பது திராவிடம் என்றே அழைக்கப்படும். “பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தந்தம், கசம் இந்த தேசங்களை ஆண்டவர்கள், இவர்கள் அனைவரும் மேலே சொன்னபடி சூத்திரராய் விட்டார்கள்” என்கிறது மனு.
எந்த சொல் கொச்சையாக பயன் படுத்தப்பட்டதோ அதே சொல் அரசியல் ஆயுதமாக பேசப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும், உணர்விற்கும், உயர்விற்கும் அடித்தளம் அமைத்துவிட்டது என்ற கோபத்தில் திராவிடம் என்ற சொல்லின் மீது தனது விரோத மனப்பாங்கு காட்டி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு என்ற சொல்லே பிடிக்கவில்லையாம்.., அதற்காக நாம் தமிழ்நாடு என்ற பெயரை மாற்றிக்கொள்ளவா முடியும் அவருக்கு திராவிட இயக்கம் பிடிக்க வில்லை என்றால்.., அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நாங்கள் என்ன பெயரா மாற்றிக்கொள்ள முடியும்.
ஆளுநர் ஒரு பிரச்சார கருவி தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..