அரசு பள்ளி ஆசிரியை கொலை…!! டிஐஜி ஆய்வு..!! வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!
தஞ்சாவூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தஞ்சாவூர் டிஐஜி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி இன்று வழக்கம் போல வகுப்பறையில் பாடம் நடத்திவிட்டு. அதன் ஆசிரியர் ஓய்வு அறையில் காத்திருந்துள்ளார்.
அப்போது அந்த அறைக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளார். ஆசிரியரின் சத்தம் கேட்டு வந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிலைகுலைந்து போன ரமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அவர் உயிர் இழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காவல்துறையினர் நடத்திய சோதனையில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது தஞ்சாவூர் மாவட்டம் சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் மற்றும் ரமணி இருவரும் காதலித்து வந்துள்ளனர்., இருவீட்டினர் சம்மதத்துடனும் திருமணம் செய்துக்கொள்ள நினைத்த இவர்கள், நேற்று ரமணி வீட்டில் போய் பேசியுள்ளனர். ஆனால் அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த மதன்குமார் ரமணியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் தஞ்சை மாவட்ட சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..