திருமணம் செய்து வைக்காத பாட்டி.. இறுதியில் பேத்தியின் பகீர் சம்பவம்..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பேரளையூர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் கலியமூர்த்தி-தனலட்சுமி இவர்களுக்கு பன்னீர்செல்வம் என்ற மகன் இருந்தார்.
பன்னீர்செல்வத்திற்கு திருமணமாகி புஷ்பவள்ளி என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும், சிவரஞ்சனி மற்றும் சிவசத்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதில் பன்னிர் செல்வமும் சிவகுமாரும் உயிரிழந்து நிலையில் சிவரஞ்சனி திருமணம் ஆகி கருவேப்பலங்குறிச்சியில் வசித்து வருகின்றார். சிவ சத்தியா மட்டும் திருமணம் ஆகாத நிலையில் தன்னுடைய தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
தனது சகோதரர் சிவகுமார் இறந்த அதிர்ச்சியில் சிவசக்தி மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனது பாட்டியிடம் தனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது பாட்டியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சிவ சத்யா அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து பாட்டி தனலட்சுமியை தாக்கினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவ சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது நான் தான் பாட்டியை கொன்றேன். என்னை கைது செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்யாமல் வேறு வழி இன்றி வீட்டிலேயே காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்