மாரடைப்பு வராமல் இருக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..!!
சில காலமாக மாரடைப்பால் இறப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். மாரடைப்பானது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்தம் செல்வதற்கு தடையாக இருப்பதாகும்.
இந்தமாதிரி கொழுப்புகள் இரத்த குழாய்களில் தங்குவதற்கு உடல் உழைப்பில்லாமல் இருப்பது, தேவையில்லாத ஜங்க் உணவு பொருட்களை உட்கொள்வது தான் காரணமாகும்.
இதுபோல தேவையற்ற உணவுகளால் இரத்த குழாயில் கொழுப்புகள் படிகிறதோ அதுபோலவே உணவு பொருட்களை கொண்டே அதனை சரிச்செய்யலாம். ஒருவித பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த குழாய்களில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து குழாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட பழங்கள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க..
கொய்யாப்பழம்:
கொய்யாப்பழத்தில் இருக்கும் அதிகபடியான சத்துக்கள் இரத்த குழாய்களில் படிவதை தடுக்க உதவியாக இருக்கிறது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
பெர்ரி பழங்கள்:
பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பழங்களில் அதிகமான ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இருப்பதால் இவைகள் தமனி குழாய்களில் படியவிருக்கும் கொழுப்புகளை அகற்றுகிறது.
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் வலுமையான ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இருப்பதால் இதனை சாப்பிடும்போது அது தமனிகளில் படியும் ப்ளேக்குகளை அகற்ற உதவுகிறது. எனவே இதனை அடிக்கடி சாப்பிடுங்க.
மாதுளை:
மாதுளை பழமானது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இரத்த குழாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது, எனவே மாதுளை தினம் ஒன்று என சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
பப்பாளி:
பப்பாளியானது அனைத்து சீசனிலும் கிடைக்கக்கூடிய ஒரு சீப்பான பழமாகும். இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பாப்பைன் என்ற பொருள் தமனிகளில் படியும் கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
ஆப்பிள்:
தினம் ஒரு ஆப்பிளை உண்டு வர மருத்துவரிடம் எதற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இதை தொடர்ந்து சாப்பிடும்போது இதயம் சம்மந்தபட்ட நோய்களை தடுக்கலாம்.
திராட்சை:
திராட்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அதிக அளவில் உள்ளது, இதனை உணவில் சேர்த்து கொள்வதினால் மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்.