பால் திரிந்து போய்விட்டதா..? சூப்பர் டிப்ஸ்..!
எலுமிச்சை பழம் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்க அதன் மேல் தேங்காய் எண்ணெய் தடவி வைக்கலாம்.
பூசணிக்காயின் உள்பகுதியில் இருக்கும் சவ்வு பகுதியை தோசை மாவு அரைக்கும்போது அரைத்து தோசை சுட்டால் நன்றாக சுவையாக இருக்கும்.
கோதுமை மாவில் உப்பு கலந்து வைத்தால் வண்டுகள் பிடிக்காது.
அப்பளத்தின் இரண்டு பக்கமும் துணியால் சுத்தம் செய்து பின் பொரித்தால் எண்ணெய் கருப்பாக மாறாது.
தேங்காயை உடைத்து ஃபிரிஜ்ஜில் வைப்பதை தவிர்த்து உடைக்காமல் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வீணாகாது.
கொதிக்க வைக்கும்போது பால் திரிந்து போனால் அதை ஆறவைத்து மிக்சியில் அடித்து உறை ஊற்றினால் சூப்பரான தயிர் கிடைக்கும்.
நெல்லிக்காயை துருவி தேங்காய் சாதம் போல செய்தால் அருமையாக இருக்கும்.
சாம்பார் செய்து இறக்குவதற்கு முன்பு இரண்டு தக்காளியை அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.
பாயாசம் கெட்டியாகிவிட்டால் இளஞ்சூட்டில் இருக்கும் பாலை ஊற்றினால் சரியாகிவிடும்.
காய்கறியை தீயில் வேகவைத்தால் சீக்கிரம் வேகாது, தண்ணீர் கொதிக்கும்போது போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.