வேர்கடலை குழம்பு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்கடலை 100 கிராம்
காய்ந்த மிளகாய் 1
கடலை பருப்பு 1 ஸ்பூன்
சாம்பார் பொடி 2 ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
கடுகு 1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
செய்முறை:
பச்சை வேர்கடலையை நீர் சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
பின் ஒரு ஃபேனில் மாற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயில் சாம்பார் பொடி 2 ஸ்பூன் சேர்த்து லேசாக வறுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின் வேகவைத்த வேர்கடலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை நறுக்கி சேர்த்து இறக்கினால் வேர்கடலை குழம்பு தயார்.