கணவர் இறந்த துக்கம்..தந்தைக்கு குறுந்தகவல்.. இறுதியில் திருநங்கை செய்த விபரீத முடிவு..!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் கணேசன் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெண்ணாக மாறுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறிய அவர் தன் பெயரை யாழினி என மாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில் இவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்ற இளைஞரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
கடந்த 15ஆம் தேதி திடீரென சந்தோஷுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சைப்பலனின்றி அவர் கடந்த 20 ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த யாழினி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையே தன்னுடைய தந்தைக்கு அவர் செல்போனில் என் காதல் கணவரை பிரிந்து என்னால் வாழ முடியவில்லை என்பதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். மேலும் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் யாழினியின் வீட்டிற்கு விரைந்தனர். அப்போது யாழினி தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருந்தாரர்.
உடனே இது தொடர்பாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் காதல் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்