இயற்கை முறையில் பாட்டி வைத்தியம்..!
குடல் புண்:
மஞ்சலை எரித்து சாம்பல் எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட குடல் புண் சரியாகும்.
வாயு தொல்லை:
வேப்பம் பூவை காயவைத்து பொடியாக்கி சூடான நீரில் கலந்து சாப்பிட வாயு தொல்லை சரியாகும்.
மலச்சிக்கல்:
செம்பருத்தி இலையை தூள் செய்து நாளைக்கு இருவேளை சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
வயிற்றுவலி:
நெய்யில் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து பருகி வர வயிற்றுவலி சரியாகும்.
பல் வலி தீர:
மிளகு தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கலாம். மிளகு தூளுடன் கிராம்பு தைலம் சேர்த்து பல் ஈறுகளில் தடவி வரலாம்.
கொழுப்பு கரைய:
பசலைக்கீரையை பூண்டு, மிளகு, வரமிளகாய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.
காயங்கள் குணமாக:
வேப்பங்கொழுந்தில் மஞ்சள் சேர்த்து அரைத்து அதனை காயங்களின் மீது தடவி வர காயங்கள் சரியாகும்.
சர்க்கரை குறைய:
நாவல் கொட்டை, வெந்தயம், சுக்கு, நெல்லி, ஓமம் ஆகியவற்றை பொடி செய்து சூடான நீரில் கலந்து இருவேளையும் குடித்து வரலாம்.