திருவண்ணாமலையில் தரை புரண்டோடும் வெள்ளம்..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கனமழை பெய்தது. மேலும், ஜவ்வாது மலை அடிவாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், நேற்று செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குப்பநத்தம் அணையில் இருந்து உபரிநீர் அணைக்கு வரும் நீர், திறந்து விடப்படுவதாலும் ஜவ்வாது மலை சிறு ஓடைகளில் இருந்து ஆற்றுக்கு வரும் தண்ணீர் தற்போது செய்யாற்றில் கலந்து வெள்ளப் பெருக்காக மாறிவரும் காட்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..