டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மீண்டும் சிபிசிஐடி விசாரணை

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

குரூப் 4, குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. 2016-ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் தேர்வான, கடலூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இதனால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம் காந்தனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொண்டு நடத்தப்படும் விசாரணையில் டி.என்.பிஸ்.சி முறைகேடு தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால், அவர்களை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி முடுக்கிவிட்டுள்ளது.

What do you think?

சென்னை ஷாஹின்பாக்; தொடரும் 5-வது நாள் போராட்டம்

அன்புச்செழியன் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்