நாளை விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் GSLV-F 10 ராக்கெட்!

நாளை ஸ்ரீஹரிகோட்டவிலிருந்து GSLV-F 10 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவப்படுகிறது ‘ஜிஐசாட் – 1’ செயற்கைக்கோள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புவி கண்காணிப்பு, கடல் ஆய்வு, விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும், ‘ஜிஐசாட் – 1’ என்ற அதிநவீன செயற்கைக்கோளை உருவாகியுள்ளது.
இந்த ஜிஐசாட் – 1 செயற்கைக்கோள் மொத்தம், 2,268 கிலோ எடை கொண்டது.

இதிலுள்ள நவீன கேமராக்கள், புவி பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து, இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். மேலும், வானிலை நிலவரங்கள், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இது உதவுகிறது.

இந்த ஜிஐசாட் – 1 செயற்கைக்கோள் நாளை மாலை 5.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து GSLV-F 10 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவப்படுகிறது.

What do you think?

‘ஹோலி பண்டிகையில் பங்கேற்க போவதில்லை’ மோடி அதிரடி!

‘விஜய்யின் அந்த ரகசியம் எனக்கு தெரியவேண்டும்’ ஹிருத்திக் ரோஷன்!