மார்ச் 5ந் தேதி விண்ணில் பாயும் GSLV – F10 ராக்கெட்!

அதிநவீன புவி கண்காணிப்பு ஜியோ இமேஜிங்-1 (GISAT-1) செயற்கைக்கோள் அடுத்த மாதம் 5ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில், ஜி-சாட்-1 செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி – எப்10 ( GSLV – F10) ராக்கெட், 14வது முறையாக விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, மார்ச்- 5ஆம் தேதி மாலை 5.43 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 2,275 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் புவியை கண்காணிக்காகவும், வானிலை தரவுகளை ஆய்வு செய்வதற்காகவும் விண்ணில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

What do you think?

நடிகர் விஜய்யிடம் பறிமுதல் ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு !

தமிழக சட்டசபை அடுத்த மாதம் மார்ச் 9 ஆம் தேதி கூடுகிறது !