டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த சந்திப்பு குறித்து பேசினார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்ததாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரையில் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை செய்தோம்.அதை தொடர்ந்து 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்துள்ளதாக கூறினார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் உறுதியாக நடைபெறும் என்றும் அமைச்சர் உறுதிபட தெரிவித்தார். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு கடன் திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்