குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்தியன் பிரீமியர் லீக் 2023 (IPL 2023) சீசன் பிளேஆஃப்கள் நடைபெற்று வருகிறது. குவாலிபையர் 1 போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
தோற்கும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வெள்ளிக்கிழமை 2வது குவாலிபையர் போட்டியில் மோதும். டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. டெவோன் கான்வே 40 ரன்னுடனும், ராயுடு 4 ரன்னுடனும் இறுதியாக களத்தில் இருந்தனர். ரஹானே 17 ரன்களும், ஷிவம் துபே 1 ரன்னும், ரிதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களும் எடுத்தனர்.
டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.