பள்ளி வராத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க உறுதி..!!
பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக தூத்துக்குடியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பேசிய அவர், 15 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.
2023 – 2024ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டு 15 நாட்களுக்கு மேல் வருகை புரியாத மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் குறித்து கணக்கெடுப்புகள் எடுத்து, மீண்டும் அந்த மாணவர்களை மீண்டும் சேர்க்கை செய்வதற்கான ஆலோசனை குறித்து செயல்களை செய்ய வேண்டும். 28.07.23 முதல் 26.08.23 வரை பள்ளிக்கு வருகை தராத மாணவர்கள் எந்த காரணத்தால் இடை நிறுத்தம் செய்துள்ளார்கள் என்பதை வெப்சைட்டில் பதிவிட்டுள்ளார்கள்.
அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு, ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் அனைவரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..