குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 182 தொகுதிகளை குஜராத் மாநிலத்தில் முதற்கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. பின்னர் 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்றுடன் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை முடிவடையும் பிரச்சாரத்தால் குஜராத்தில் அணைத்து கட்சிகளும் விமர்சையாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். டிசம்பர் 1ம் தேதி முதற்கட்ட தேர்தலும் 5ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது.
இம்ம்முறை மூன்று தேசிய கட்சிகள் தேர்தலில் போட்டிடுவதால் குஜராத் பரபரப்பாக உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமா இல்லை மற்ற காட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சியை பிடிக்குமா என்று எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.முதற்கட்ட பிரச்சாரம் முடியவுள்ளதால் அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளனர். பல தேசிய தலைவர்கள் நேரில் சென்று மக்களிடம் வாகு சேகரித்தும் வருகின்றனர்.