ஜிவி பிரகாஷ் 37..! ஆட்டோகிராப் பேஜ்..! படிக்க மறக்காதீங்க..!
ஜிவி பிரகாஷ்:
இவர் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளருமாவார்.
இவர் கடந்த 2015 இல் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தமிழ்த் திரைப்படமான வெயிலில் திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் அதன்பின் இயக்குனர் எஸ். சங்கரின் தமிழ்த் திரைப்படமான ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் ஒலிப்பதிவில் இவர் முதன்முதலில் ஒரு பாடகராகவும் 2013 இல், பிரகாஷ் குமார் “ஜி. வி. பிரகாஷ் குமார் புரொடக்சன்ஸ்” என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
இவரது தயாரிப்பில் வெளியான முதல் படம் மத யானைக் கூட்டம் ஆகும். இவ்வாறு பன்முக திறமைகளை கொண்டுள்ளவர் தான் ஜீவி பிரகாஷ். இவர் இசையமைத்த மற்றும் பாடிய பாடல்களும் ஏறளம்.
இவர் இசையமைப்பில் வெளிவந்த முதல் பாடல் வெயில் திரைப்பத்தில் இடம் பெற்ற உருகுதே.. மருகுதே…. இந்த பாடலில் அமைந்துள்ள வரிகளை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை
கடவுள்கிட்ட கருவரை கேட்டு உன்னை சுமக்கவா…..உதிரம் முழுக்க உனக்கே என்று எழுதி கொடுக்கவா….
திரைப்பட இசையமைப்பாளர்களை வெகுவாக மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பது பாடல்கள் தான். தனது மெலோடி பாடல்களால் அக்கம்பக்கம் யாருமற்ற நேரங்களில் ரசிகர்களின் மனதுக்குள் பூக்கள் பூக்கும் தருணத்தை கொண்டு வந்திருப்பார்.
அந்த பாடல்களின் வரிசை தான் இது…
கீரிடம் திரைப்டத்தில் அமைந்துள்ள அக்கம பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்…..
கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு ஏற்ப, ஜி.வி.பிரகாஷின் இசை, நம் மனதிற்கு இன்பத்தை தந்திருக்கும்.
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே..ஓர் அகராதி….
பாடலில் வரும் மென்மையான இசை இப்பாடல் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் மெலிதான புன்னகை ஒன்றை பூக்கச் செய்திருக்கும்.
அடுத்து வறுமையும் கடனும் கதவடைத்துக் கொண்ட வாழ்க்கையில் அங்காடித் தெருவின் ஒரு கடைகளுக்குள் வாழும் எண்ணற்ற இளம் தொழிலாளர்களின் மனதுக்குள் மடித்து வைக்கப்பட்ட காதலை சொன்ன பாடல் இது.
உன் பேரைச் சொல்லும் போது உள்நெஞ்சில் கொண்டாட்டம்……
மதராச பட்டினம் திரைப்படம் சுதந்திரப் போராட்டக் காலத்து நினைவுகளையும் காதலையும் எதார்த்தமாக திரையில் கொண்டுவந்த திரைப்படம். கதையோட்டத்துக்கு தேவையான இடங்களில் வரும் அத்தனை பாடல்களுமே ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. அதிலும் ஆளும் வர்க்கத்து நாயகிக்கும் அடிமை வம்சத்து நாயகனுக்கும் இடையே பூக்கும் காதலை, இந்தப் பாடல் அருகில் சென்று உணர்த்துகிறது.
பூக்கள் பூக்கும் தருனம் ஆர்ருயிரே பார்த்த யாரும் இல்லையே….
ஆடுகளம்’ திரைப்படத்தில் வந்த இப்பாடல் இளையர்களை ரிப்பிட் மோட் களில் கேட்க வைக்கும் ..
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ஆகயம் இப்போ வலையுதடி…
மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் இப்பாடல் பெண்கள் பலருக்கு மிகவும் விருப்பமான பாடல்.பெண்கள் மனதின் உள்ள விருப்பங்கள், ஆசை, கனவு, ஏக்கம், எதிர்பார்ப்பு என எல்லாமே கலந்திருக்கும் இப்பாடல்
பிறைத் தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்…
இரவு நேரங்களில் இந்த பாடல்களை கேட்கும் அவ்வளவு இனிமையாக இருக்கும்…
இவருடைய பாடல்களை விருப்பாதர்வகள் யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு தனது இசையமைப்பினால் பலரது இதயங்களை கொள்ளை அடித்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் அவர்களுக்கு மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்