ஜிப்ஸி சென்சார் கட் 2 – ‘ஒரே நாடு, ஒரே மொழி’

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படத்திலிருந்து சென்சார் செய்யப்பட்ட மற்றொரு காட்சி யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவை ஏக எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படம் நாளை (மார்ச்-6) வெளியாகவுள்ளது. ஜீவா, சுஷீலா ராமன் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர், பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், சென்சாருக்கு சென்றிருந்த ‘ஜிப்ஸி’ திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் சர்ச்சைக்குரியவை என தனிக்கை அதிகாரிகளால் நீக்கப்பட்டிருந்தன. அந்த காட்சிகள் தற்போது ஸ்னீக் பீக் வீடியோ என்று யூடியூப்பில் வெளியாகியுள்ளன. இரண்டாவதாக வெளியான வீடியோவில், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றமுடைய அரசியல்வாதி ஒருவர் பேசுகிறார்.

“ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி இதுதான் என் வாழ்க்கையின் லட்சியம். இந்த கங்கையில் அதர்மத்தின் ரத்தம் கலந்து தேசம் புனிதமாகட்டும்”. என்று பிரசாரம் செய்வது போன்றும், அவரை சுற்றியுள்ள மக்கள் ஆக்ரோஷமாக கோஷமிடுவது போன்றும் அக்காட்சி அமைந்துள்ளது. இதுபோன்ற காட்சிகளால் ‘ஜிப்ஸி’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

What do you think?

ரஜினி நடிக்கும் “அண்ணாத்த” படத்தின் வில்லன் இவரா?

‘வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் முகம்’ அதிர்ச்சியடைந்த வாக்காளர்!