February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

இந்துக்களை உஷார் படுத்தும் ஹெச்.ராஜாவின் சர்ச்சை டிவிட்கள்

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவின் ட்விட்டர் பதிவுகள் சில இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை இஸ்லாமிய அமைப்புகளால் நடத்தப்பட்ட சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதில், பெண்கள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அமைதியான முறையில் சாலையோரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்களும் போலீசாரின் அராஜகத்தை கண்டித்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான முறையில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார். “சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்” என்று ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் பகிர்ந்துள்ள மற்ற பதிவுகளில் கோவை கலவரத்தை குறிப்பிட்டும், தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலைகள் குறித்தும், சீனாவில் நடக்கும் அடக்குமுறையை ஒப்பிட்டும் கருத்துகளை பதிவிட்டுள்ளார். ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது கடும் சர்ச்சையாகி உள்ளது.

இந்த பதிவுகளை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்தும், தக்க பதிலடிகளை கொடுத்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

அமேசான் நிறுவனரின் பிரம்மாண்ட பங்களா; வெறும் 1,178 கோடி தான்!

Digital Team

அமித்ஷா மிகுந்த வேதனையில் இருப்பார்: சிவசேனா கிண்டல்!

Digital Team

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்! – டொனால்ட் ட்ரம்ப்

Digital Team

மாணவர்கள் எதிர்காலம் வீணாகபோய்விடும்! – ரஜினிகாந்த் அறிவுறுத்தல்

Digital Team

திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

Digital Team

அனுஷ்காவின் புதிய காதல் – அதிச்சியில் பிரபாஸ்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam