தமிழகத்தில் கலவரம் வெடித்தால் அதற்கு எச்.ராஜா தான் காரணம் – தமிமுன் அன்சாரி !

ட்விட்டர் மூலம் பா.ஜ.கவின் எச்.ராஜாவும், கல்யாணராமனும் மதக்கலவரங்களை தூண்டுகின்றனர் என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி போன்று தமிழகத்தில் வன்முறை நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாஜகவின் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ட்விட்டர் மூலம் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ஆகியோர்தான். அவர்கள் மீது தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா பேசியதற்குப் பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அதுபோல, தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் கருப்புச் சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறும் வரை ஜனநாயக அமைப்புகளுடன் அறவழியில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.சி.ஏ.ஏவுக்கு எதிராக நாளை மறுநாள் (பிப்.,29) கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர் என தெரிவித்தார்.

What do you think?

ரஜினிகாந்த்தின் ஆவேச பேச்சுக்கு கமல்ஹாசன் பாராட்டு !

டெல்லி கலவரத்திற்கு குற்றவியல் நீதித்துறை விசாரணை அமைக்கப்பட வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி