“ஹேக்கத்தான் மெகா எக்ஸ்போ விழா..”
திருவள்ளுர் அருகே பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் ஹேக்கத்தான் மெகா எக்ஸ்போ விழா கவரைப்பேட்டை ஆர்.எம்.கே கல்லூரியில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரியில் +1 மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கான ஜூனியர் ஹேக்கத்தான் ஃபியூச்சர் கோடர்ஸ் மெகா எக்ஸ்போ விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாணவர்கள் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை உஷார் படுத்தும் அலாரத்துடன் வேகத்தை குறைக்கும் நவீன கருவி, மற்றும் வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் மக்களை மீட்க உதவும் தற்காலிக பாலம், உள்ளிட்ட பல்வேறு நவீன படைப்புகளை உருவாக்கினர்.
இதனை தொடர்ந்து ஆர்.எம்.கே கல்விக்குழுமங்களின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆர்.எம்.கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறந்த படைப்பை உருவாக்கிய பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கினார்.
இப்போட்டியில் 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..