ஹேர் ஸ்மூத்னிங் இனி வீட்டிலேயே செய்யலாம்..!
பெண்கள் முகத்தை எவ்வளவு அழகாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்களோ, அதே அளவிற்கு கூந்தலையும் அழகாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள். முடி கொட்டாமல் இருக்க வேண்டும், மென்மையாக இருக்க வேண்டும் என்றும் கூந்தலை அதிகமாக பராமரிப்பு செய்வோம்.
பலரும் பியூட்டி பார்லருக்கு சென்று கூந்தலை ஸ்மூத்னிங் செய்வது உண்டு ஆனால் பார்லருக்கு செல்லாமல், வீட்டிலேயே ஸ்மூத்னிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முக்கிய குறிப்பு இதை பெண்கள், ஆண்கள் என இருவரும் பயன்படுத்தலாம்
ஸ்மூத்னிங் கிரீம் செய்ய தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு -1,
கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன்,
பழுத்த வாழைப்பழம் – 2
செய்முறை : உருளைக்கிழங்கு தோல் நீக்கி, பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும், பின் அதை ஒரு காட்டன் துணியில் பிழிந்து சாறை எடுத்துக் கொள்ளவும்.
எடுத்துக்கொண்ட சாற்றில், ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் அதனுடன் வாழைப் பழத்தையும் மிக்சியில் அரைத்து எடுத்துக் கொண்டு, ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். ஸ்மூத்னிங் தாயார்.
உபயோகிக்கும் முறை : தயார் செய்த ஸ்மூத்னிங் க்ரீமை, தலையில் அப்ளை செய்வதற்கு முன். தேங்காய் எண்ணெய் தடவி ஊற வைக்க வேண்டும்.
பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியின் வேர் வரை தடவ வேண்டும், தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்.
ஒரு முறை செய்தால் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை இந்த ஸ்மூத்னிங் இருக்கும். வறட்சியான கூந்தல் உள்ளவர்கள் இதை செய்யலாம். இதனால் பக்க விளைவு எதுவும் ஏற்படாது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி