தலைவனாகவும் காதல் நாயகனாகவும் இருக்கும் “தளபதி விஜய்” பிறந்தநாள் வாழ்த்து..
தளபதி விஜய் என்று சொன்னால் அவரை தெரியாதவரே இருக்க முடியாது.., அதுவும் அவர் சொல்லும் “என் நெஞ்சில் குடியிருக்கும் ” என்ற சொல்லுக்கு மயங்காத ஆட்களே இல்லை.. நடிப்பில் ஆர்வம் கொண்ட “தளபதி விஜய்”. நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மாகினார்.
செந்தூர பாண்டி என்ற படத்தில் விஜய காந்திற்கு தம்பியாகவும், கதா நாயகனாகவும் நடித்திருப்பார்.., ஆனால் அந்த படத்தில் அவர் பல அவமானங்களை சந்தித்தார். “என்ன மூஞ்சி இது.. தகர டப்பா மாதிரி இருக்கு இவரெல்லாம் யார் படம் நடிக்க வர சொன்னது” என்று ஒரு பிரபல பத்திரிகை நிறுவனம் இவரை பற்றி விமர்சனம் செய்தது.
அந்த அவமானத்தை.. மாற்றும் விதமாக.. பல காதல் வெற்றி படங்களை கொடுத்தார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே.., இந்த படங்களின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.
அதிலும் பூவே உனக்காக படத்தில்.. ஒரு தலை காதலனாக நடித்து.., காதல் என்பது சிலருக்கு பூ மாதிரி ஒன்னு போச்சுன்னா இன்னொன்னு.., ஒரு சிலருக்கு செடி மாதிரி” எனும் வசனம் இன்று பலரின் மனதில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
காதலனாக மட்டும் அல்லாமல்.. சிறந்த நண்பனாகவும் ப்ரண்ட்ஸ், நண்பன் போன்ற படத்தில் நடித்து குழந்தைகளையும் தன்பக்கம் ஈர்த்தவர்.., இதை தொடர்ந்து தெறி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள்.. இன்னும் அவருக்கென்று உலகமெங்கும் ரசிகர் படையை உருவாக்கியது..
முக்கியமாக அவரின் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் சொல்லும் “குட்டி ஸ்டோரி” ராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.. எந்த பத்திரிகையில் வேடிக்கையாக விமர்சனம் செய்யப்பட்டரோ.., மாஸ்டர், வாரிசு, படத்தின் மூலம் அதே பத்திரிகையில் அவரை பற்றி சிறப்பாக அதே நடிப்பின் மூலம் எழுத வைத்தார்..
தற்போது விஜய் மக்கள் இயக்கம் அமைத்து நாடு முழுவதும்.. உதவி செய்துக்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அனைவரையும் சந்தித்து.. சால்வை அணிவித்து சான்றிதழ், பரிசு வழங்கினார்.
இவர் செய்யும் இந்த செயல் இன்னும் தொடர வேண்டும்.. என்று இறைவனை வேண்டும் மக்கள் இருந்தாலும்.. இவர் அரசியலிற்கு வர வேண்டும் என்று அன்போடு கேட்கும் ரசிகர்கள் மறுபக்கம்..
சிறந்த நடிகராகவும்.., ரசிகர் களுக்கு ” சிறந்த தலைவனாகவும்”, ரசிகர்கள் அன்போடு அழைக்கும் பாசமிகு தளபதி விஜய் அண்ணா” அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..