வங்கி வேலை கிடைத்த சந்தோஷம்.. 6 மாதத்தில் கலைந்த கனவு..!
உத்திர பிரதேஷம் மாநிலம் நொய்டாவில் சிவானி குப்தா (27) என்பவர் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார்.
எம்பிஏ பட்டதாரியான இவருக்கு ஏஜென்ஸியின் மூலம் தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இந்தநிலையில் வங்கி வேலைக்கு சென்ற சிவானி குப்தா, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் பழகுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வங்கியின் மேலாளர்கள் இவருக்கு பணிச்சுமை அதிகரித்தனர். இருப்பினும் சிவானி குப்தா தனது வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் சிவானி குப்தாவை அவதூறாக பேசியதுடன், மனநலம் பாதித்தவர் என்றும் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் சிவானிக்கும் வங்கியில் வேலை பார்க்கும் பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த வங்கியின் மேலாளர்கள் சிவானியை அழைத்து கண்டித்ததுடன் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.
இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த சிவானி காவல்துறையினருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அவரது பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று திவீர சிகிச்சை அளிக்கபட்டுவந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவானி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் ” கடந்த ஆறு மாதங்களாக என்னுடன் பணிபுரியும் ஊழியர்கள் எனக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். இதற்குக் காரணமானவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்மந்தபட்ட வங்கியில் சென்று உழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்