‘T20 போட்டியில் வெறும் 37 பந்துகளில் சதம்’ ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்டியா!

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா, 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் விளையாடாத ஹர்திக் பாண்டியா முதுகு காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலியுடன் நடுக்கடலில் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார். ஆனால் உடற்தகுதியை நிரூபிக்க முடியாததால் மீண்டும் இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்கமுடியவில்லை.

இந்நிலையில் டிஒய் பாட்டீல் டி20 தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக விளையாடி வரும் அவர் மும்பையில் நடைபெற்ற சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டம் ஆடினார். வெறும் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய பாண்டியா மொத்தம் 39 பந்துகளில் 105 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

hardik pandyaக்கான பட முடிவுகள்

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. பாண்டியாவின் இந்த அதிரடி ஆட்டம் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

What do you think?

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ்!

‘Google,FaceBook,Twitter உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை எச்சரிக்கும் பாகிஸ்தான் அரசு’ காரணம் இதுவா?