’20 சிக்ஸர்கள், 55 பந்துகளில் 158 ரன்’ மீண்டும் ஒரு டி20 சதம் பாண்டியாவின் வெறித்தனம்!

ஹர்திக் பாண்டியா டிஓய் பாட்டில் டி20 தொடரில் தொடர்ச்சியாக 2வது முறையாக சதம் அடித்து அசத்தியுள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் விளையாடாத ஹர்திக் பாண்டியா முதுகு காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் உடற்தகுதியை நிரூபிக்க முடியாததால் மீண்டும் இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்கமுடியவில்லை.

இந்நிலையில் டிஒய் பாட்டீல் டி20 தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். மும்பையில் நடைபெற்ற ஒரு போட்டியில் 39 பந்துகளில் 105 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

அந்தவகையில் இன்று நடைபெற்ற போட்டியிலும் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பாண்டியா. இந்த போட்டியில் 55 பந்துகளில் 158 ரன்கள் குவித்து எதிரணியை பந்தாடினார். அதிலும் குறிப்பாக 4 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்களை பறக்கவிட்டார். காயத்திலிருந்து மீண்ட பாண்டியா டி20 போட்டியில் தொடர்ச்சியாக 2வது சதம் அடித்துள்ளார். பாண்டியாவின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

What do you think?

‘கொரோனா வைரஸ் பீதி’ சென்னையை சுற்றிவரும் ஹாங்காங் பெண்!

ஆளுநரின் துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவர் நியமனம்- வைகோ கண்டனம்!